மக்கள் தொகையை அதிகரிக்க ரஷ்யா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
ரஷ்யாவில் (Russia) கல்லூரி மாணவிகள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றால் ஒரு லட்சம் ரூபிள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா (China), ஜப்பான் (China) மற்றும் தென் கொரியா (South Korea) நாடுகளை தொடர்ந்து பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ரஷ்ய அரசும் ஊக்கத்தொகை வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவில் உயிரிழப்பு விகிதத்தை விட பிறப்பு விகிதம் குறைவு, மக்கள் வேறு பகுதிகளுக்கு குடியேற்றம் போன்ற காரணங்களால் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகின்றது.
எதிர்கால பேரழிவு
ரஷ்யா - உக்ரைன் (Ukraine) இடையேயான போர் மக்கள்தொகை விகிதத்தை மேலும் கவலை அடைய வைத்துள்ளது.
ரஷ்யாவில் வரலாறு காணாத அளவுக்கு கடந்தாண்டு பிறப்பு விகிதம் குறைந்துள்ள நிலையில், 2024 முதல் பாதியில் வெறும் 5,99,600 குழந்தைகள் மட்டுமே ரஷ்யாவில் பிறந்துள்ளன.
25 ஆண்டுகள் தரவுகளில் இதுவே மிகக் குறைந்த அளவு எனவும் இதனை நாட்டின் எதிர்கால பேரழிவு என்று ரஷ்ய அரசு குறிப்பிட்டுள்ளது.
நிதியுதவி திட்டம்
இந்தநிலையில், ரஷ்யாவில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் பொருட்டு பல்கலைக்கழக மாணவிகளுக்கு நிதியுதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இத்தொகையைப் பெறுபவர்கள் 25 வயதுக்குட்பட்ட உள்ளூர் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முழுநேர மாணவர்களாகவும் கரேலியாவில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பெண்களுக்கு 1,00,000 ரூபிள் (இந்திய மதிப்பில் ரூ. 81,000) ஊக்கத்தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |