இணையத்தளக் குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் ரஷ்யா முதலிடம்
உலகளாவிய ரீதியில் இணையதளக் குற்றங்கள் அதிகளவில் நடைபெறும் நாடு எது என்பது குறித்து சர்வதேச குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டது.
குறித்த ஆய்வானது ரான்சம்வேர், கிரெடிட் கார்ட் திருட்டு மற்றும் மோசடி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு்ள்ளது.
இதன்படி இணையக் குற்றங்களில் ரஷ்யா முதலிடம் பிடித்துள்ளதுடன் உக்ரைன் 2 ஆவது இடத்தையும் சீனா 3 ஆவது இடத்தையும், அமெரிக்கா 4 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
ரஷ்யா மற்றும் உக்ரைன்
மேலும் நைஜீரியா 5 ஆவது இடத்தையும், ருமேனியா 6 ஆவது இடத்தையும் பிடித்துள்ளதுடன் 7ஆவது இடத்தை வடகொரியா பிடித்துள்ளது.
அந்த வரிசையில் இங்கிலாந்து 8ஆவது இடத்தையும், பிரேசில் 9ஆவது இடத்தையும், இந்தியா 10ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகியவை மிகப்பெரிய அளவில் தொழில்நுட்ப இணையத்தளக் குற்றங்களின் மையமாக விளங்கியமை இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அத்துடன் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் தொழில்நுட்ப ரீதியான இணையத்தளக் குற்றங்களில் குறைந்த அளவில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |