உக்ரைன் ரயில் நிலையம் மீது ரஷ்யா கோர தாக்குதல் - 22 பேர் பரிதாப மரணம்
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
By Jaso
ரயில் நிலையம் மீது தாக்குதல்
உக்ரைன் ரயில் நிலையமொன்றின் மீது ரஷ்யா நடத்திய ரொக்கட் தாக்குதலில் குறைந்தது 22 பேர் உயிரிழந்து விட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஆறு மாதங்கள் நிறைவடைந்த நாளில் இந்த கோர தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு நகரமான சாப்லைனில் நடந்த தாக்குதலில் பலியானவர்களில் ஐந்து பேர் வாகனத்தில் எரித்துக் கொல்லப்பட்டதாக வும் அதில்11 வயது சிறுவனும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்
தாக்குதல் சம்பவம் தொடர்பில் ரஷ்யா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனினும் பொதுமக்களின் குடியிருப்பை தாக்குவது என்ற குற்றச்சாட்டை அது மறுத்துள்ளது.

தற்போது நான்கு பயணிகள் பெட்டிகள் தீப்பிடித்து எரிகின்றன... பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்," என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்