உக்ரைனில் ரஷ்யா பயங்கர தாக்குதல்! சீறிப்பாயும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள்
அமெரிக்க அமைதிப் பேச்சாளர்களின் வருகைக்காகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா மீண்டும் தொடங்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று உக்ரைன் தலைநகர் கீவ் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தீவிரத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாக மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
இரவு முழுவதும் நீடித்த இந்தத் தாக்குதலால் தலைநகரின் பல மாவட்டங்களில் தீப்பற்றி எரிந்ததாகவும் சுமார் 14 உயரடுக்குக் கட்டிடங்கள், ஒரு விடுதி, பாடசாலை, கிளினிக், சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட பல இடங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெட் ஆற்றலில் இயங்கும் ட்ரோன்கள்
இந்நிலையில், "கீவ் நகரம் வெடித்துச் சிதறி எரியும் நிலைக்குள்ளானது" என்று உக்ரைனுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கதரீனா மாதெர்னோவா தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Image Credit: intelligenceonline
இந்தத் தாக்குதல்களில் தலைநகரில் 35 பேர் காயமடைந்துள்ளதாக மாநில அவசரக்கால சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரையிலும் ஜெட் ஆற்றலில் இயங்கும் ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்ததால், நகரம் முழுவதும் வெடிப்புச் சத்தங்கள் எதிரொலித்துக் கொண்டே இருந்தாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24