ரஷ்யா பயணமானார் சிறிலங்கா இராணுவ தளபதி
#srilainka
#russia
#general-shavendra-silva
#Oleg Salyukov
By Independent Writer
சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ( General Shavendra Silva) ரஸ்யாவிற்கு பயணமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய இராணுவத் தளபதி ஜெனரல் ஒலெக் சல்யுவோவ் (Oleg Salyukov) இன் அழைப்பின் பேரில் எட்டு நாள் நல்லெண்ண விஜயமொன்றை சிறிலங்கா இராணுவ தளபதி மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யாவின் இராணுவத் தளபதி ஜெனரல் ஒலெக் சல்யுவோவ் (Oleg Salyukov) மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் ஜெனரல் சவந்திர சில்வாவை வரவேற்றுள்ளனர்.
ரஷ்யாவின் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஜெனரல் சவேந்திர சில்வா பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.
ரஷ்ய இராணுவ அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு ஜெனரல் சவேந்திர சில்வா விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.