கீவ் நகரை அதிர வைத்த ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Drones
By Dharu Aug 05, 2026 11:21 PM GMT
Report

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மீது ரஷ்யா நேற்று ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்ததுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத்தில் கீவ் நகரம் முழுவதும் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன், பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. சமீப வாரங்களாக ரஷ்யா தனது வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கீவ் நகரம் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒருமுறை ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், போதிய ஏவுகணைத் தடுப்பு பாதுகாப்பு இல்லாததே மீண்டும் பல உயிர்களை காவுகொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அமெரிக்காவிற்கான உக்ரைனின் தூதுவர் பதவி நீக்கம்

அமெரிக்காவிற்கான உக்ரைனின் தூதுவர் பதவி நீக்கம்

பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தடுப்பு ஏவுகணை

மேலும், ஏவுகணைகளை இடைமறிக்கும் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தடுப்பு ஏவுகணைகளை விரைவாக வழங்குமாறு உக்ரைனின் மேற்கத்திய கூட்டாளி நாடுகளுக்கு அவர் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

கீவ் நகரை அதிர வைத்த ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல் | Russia S Missile Attack Shakes Kiev

உக்ரைன் விமானப்படையின் தகவலின்படி, ரஷ்யா ஏவிய 115 ட்ரோன்களில் சுமார் 90 சதவீதம் சுட்டு வீழ்த்தப்பட்டன. எனினும், ஏவப்பட்ட 24 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் நான்கு 'சிர்கான்' (Zircon) அதிவேக குரூஸ் ஏவுகணைகளில் ஒன்றைக் கூட இடைமறிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் கிடங்குகள், முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்கள் சேதமடைந்தன. மேலும், ஒரு மதுபான உற்பத்தி நிறுவனம், கட்டுமானப் பொருட்கள் கிடங்குகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சரக்கு விநியோக மையங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவுக்கு பேரிடி! உக்ரைனுக்கான ஆதரவை சீரமைக்க தொடங்கிய அமெரிக்கா

ரஷ்யாவுக்கு பேரிடி! உக்ரைனுக்கான ஆதரவை சீரமைக்க தொடங்கிய அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி