உக்ரைன் போரில் தடுமாறும் ரஷ்யா -உண்மையை வெளிப்படுத்திய அமெரிக்கா
உக்ரைன் மீதான போரில் ரஷ்யா ஏன் தடுமாற்றத்தை அடைந்து வருகிறது என்பதற்கான காரணத்தை அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ரஷ்யா போரில் பயன்படுத்தும் ஏவுகணைகளில் பெரும்பாலானவை இலக்கை எட்டவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. இதுவே ரஷ்யா கடும் பின்னடைவை சந்திக்க காரணம் எனவும் அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரஷ்ய படையினர் உக்ரைன் மீது ஏவிய ஏவுகணைகளில் 60% இலக்கை எட்டவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் பெரும்பாலான அடிப்படை நோக்கங்களைக் கருத்தில் கொள்வதை ரஷ்யா அடையத் தவறிவிட்டது எனவும் அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தாலேயே, உக்ரைன் போர் ஒரு மாதம் கடந்தும் நீடிப்பதாக தம்மை வெளிப்படுத்த விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது கடந்த 30 நாட்களில் சுமார் 1100 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியுள்ளது. ஆனால் இவைகளில் இலக்கை எட்டிய ஏவுகணைகள் தொடர்பில் ரஷ்யாவிடம் எந்த தரவுகளும் இல்லை எனவும், இது ரஷ்யாவின் தற்போதைய சூழலை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
60% ஏவுகணைகள் இலக்கை எட்டவில்லை என்பது, இராணுவத்தின் தோல்வியாகவே கருத வேண்டும் என அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மட்டுமன்றி, 20% தோல்வி என்பதே, அந்த இராணுவத்தின் பலவீனத்தை அம்பலப்படுத்துவதற்கு சமம் என அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
