'நத்தாரை முன்னிட்டு யுத்த நிறுத்தம்' - ரஷ்யா வெளியிட்ட அறிவிப்பு
நத்தார் பண்டிகை காலத்தை முன்னிட்டு யுத்த நிறுத்தத்திற்கான எந்தவொரு முன்மொழிவும் தமக்கு கிடைக்கவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.
சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கான முதல் படியாக நத்தார் தினத்திற்குள் படைகளை மீளப் பெற வேண்டும் என உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி தெரிவித்திருந்த நிலையில், இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
அமைதி உடன்படிக்கை
கள நிலை யதார்த்தங்களை உணர்ந்து உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி செயற்படாத வரை அமைதி உடன்படிக்கை எட்டப்பட மாட்டாது என ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக உக்ரைனின் பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
பேட்ரியேட் வான் பாதுகாப்பு கட்டமைப்பு
இதேவேளை மிகவும் துல்லியமான அமெரிக்காவின் பேட்ரியேட் வான் பாதுகாப்பு கட்டமைப்பை உக்ரைனுக்கு வழங்கும் நகர்வு குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வான் பாதுகாப்பு கட்டமைப்பை உக்ரைனுக்கு வழங்குவது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா இவ்வாரத்திற்குள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவ்வாறான கட்டமைப்புக்களை இலக்குவைத்து தமது நாடு தாக்குதல் நடத்தும் எனக் கூறியுள்ளார்.
விமான ஏவுகணை, கப்பல் ஏவுகணை மற்றும் பெலஸ்ரிக் ரக சீரூந்து ஏவுகணைகள் உட்பட்ட ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட மிகவும் நவீனமான தளவாடமாக பேட்ரியேட் வான் பாதுகாப்பு கட்டமைப்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா
