உக்ரைன் போர்க்களத்தில் தடைசெய்யப்பட்ட ஆயுத பயன்பாடு
russia
war
ukrain
usa
thermobaric
By Vanan
உக்ரைன் போர்க்களத்தில் தடைசெய்யப்பட்ட தெர்மோபரிக் (thermobaric) ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா தெரிவித்துள்ளார்.
தெர்மோபரிக் ஆயுதங்களை வழக்கமான வெடிமருந்துகளாக போராட்ட களங்களில் பயன்படுத்துவதில்லை.
தெர்மோபரிக் ஆயுதங்கள், உயர் அழுத்த வெடிபொருட்களால் நிரப்பப்பட்டு, சுற்றியுள்ள சூழலில் இருந்து ஒக்சிஜனை உறிஞ்சி மிகவும் சக்திவாய்ந்த வெடிப்பு மற்றும் அழுத்த அலையை உருவாக்குகின்றன.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின்படி, ரஷ்ய குடியரசின் செச்சினியாவில் அவற்றின் பயன்பாடு இதற்கு முன்னர் கண்டறியப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று, ரஷ்ய நகரமான பெல்கோரோட் அருகே தெர்மோபரிக் உந்துகணை ஆயதத்தை பார்த்ததாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

