போதைப்பொருள் கொள்கலன்கள் விவகாரம்! விசாரணைகளுக்கு தயாரென நாமல் சீற்றம்
ஐஸ் போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பாக தமக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச முற்றாக மறுப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன், குறித்த இரண்டு கொள்கலன்களிலும் கண்டெய்னர்களில் “ஐஸ்” (கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமின்) தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் இருந்ததாக கூறப்பட்டு, அவை பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டறியப்பட்ட பின்னரும் துறைமுகத்தை விட்டு வெளியேறியதாக வந்துள்ள தகவல்கள் தொடர்பில் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய அவர், குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை நிரூபிக்கும் வரை, அவற்றின் பின்னணி காரணங்களையும் அதிலிருந்து லாபம் பெறுவோரையும் நாட்டிற்கு வெளிப்படுத்துவதாக வலியுறுத்தியுள்ளார்.
விசாரணைகளுக்கு தயார்
மேலும், “இந்த இரண்டு கொள்கலன் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். NPP மற்றும் நல்லாட்சிக் அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் எங்களை குற்றம்சாட்டுவதே அவர்கள் செய்த வேலை. CID, லஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழு, FCID, நீதிமன்றம் என எங்களிடம் விசாரணைகள் நடந்துள்ளன.
இதுபோல, இந்த போதைப்பொருள் கொள்கலன் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளவும் தயாராக உள்ளோம்,” என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், உண்மையில் இந்த கொள்கலன் சம்பவத்தில் தொடர்புடையவர்களின் அடையாளத்தை அரசு வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
