உக்ரைனில் களமிறங்கும் 20 இலட்சம் ரஷ்ய வீரர்கள்! ரத்தக்களரியாகப் போகும் களமுனை
உக்ரைன் மீது ரஷ்யா இப்போது மேற்கொண்டு வருகின்ற ஆக்கிரமிப்பு யுத்தம் அண்மைக் காலங்களில் நிறைவடையப் போவதில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.
உக்ரைனில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சண்டைகள் இன்னும் பல மாதங்கள் அல்லது சில வருடங்கள் நீண்டுகொண்டே செல்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவே பல்வேறு ஆய்வாளர்கள் கூறி வருகின்றார்கள்.
மேற்குலக ஆய்வாளர்களும் சரி, ரஷ்ய சார்பு ஊடகங்களும் சரி, உக்கரைன் தரப்புகளும் சரி யாருமே உக்ரைன் யுத்தம் வெகு விரைவில் முடிந்து விடும் என்று கூறத் துணியவே இல்லை.
அமெரிக்காவில் கசிந்த பெண்டகன் லீக்ஸ் ஆவணங்களில் கூட உக்ரைன் யுத்தம் நீடித்துக் கொண்டுதான் செல்லும் என்ற பொருள் படத் தான் அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களில் சுட்டிக்காண்பிக்கப்பட்டிருந்தது.
மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ள ஆயுத தளபாட விபரங்களை பார்க்கும் பொழுது, சில ஆயுதங்களை இந்த வருட இறுதியிலும், சில ஆயுதங்களை அடுத்த வருடத்தின் நடுப்பகுதியிலும் வழங்க இருப்பதாக மேற்குலக நாடுகள் கூறி இருப்பதையும் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
இவை எல்லாமே உக்ரைன் யுத்தம் அண்மைக்காலத்தில் முடிவடைய மாட்டாது என்ற உண்மையையே வெளிப்படுத்தி நிற்கிறது.
அதாவது உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நீண்ட காலம் தொடர இருக்கின்றது என்பது தான் யதார்த்தம்.
- அப்படியானால் அந்த நீண்ட கால யுத்தத்தை அடிப்படையாகக் கொண்ட ரஷ்யாவின் நகர்வுகள் எப்படி இருக்கப் போகின்றன?
- ரஷ்யாவின் போர்முனை தந்திரோபாயங்கள் எப்படிப்பட்டதாக அமையப் போகின்றன?
- உக்ரைனை பொறுத்தவரையில் ரஷ்யாவின் எதிர்கால திட்டம் தான் என்ன?
இந்த விடயங்கள் பற்றித் தான் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் சுருக்கமாக நாம் பார்க்க இருக்கின்றோம்,
