மேற்குலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை!! முதல் முறையாக திணறும் ரஷ்யா
100 ஆண்டுகளில் முதல் முறையாக, ரஷ்யா இறையாண்மை பத்திரத்திரத்திற்கான கட்டணத்தை செலுத்த தவறியிருக்கிறது.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பின் எதிரொலி
பெப்ரவரி 2022 இல் உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன.
ரஷ்யாவின் பொருளாதார, நிதி மற்றும் அரசியல் பிரச்சனைகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
மேற்குலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக பிணைமுறி பத்திரங்களில் முதலீடு செய்த வெளிநாட்டு கடன் உரிமையாளர்களுக்கு பணத்தை செலுத்துவதற்கு ரஷ்யாவுக்கு தடையேற்பட்டுள்ளது.
ரஷ்யா, இறையாண்மை பிணைமுறிகளுக்கு மே மாதம் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியிருந்தது. அதனை செலுத்துவதற்கான கால அவகாசமும் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலைமையானது கடனை செலுத்துவதை தவிர்த்த நிலைமையாக கருதப்படுகிறது.
