விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா..! : ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை
கஜகஸ்தானில்(Kazakhstan) நேற்று புதன்கிழமை(25) 38 பேர் உயிரிழக்க காரணமான ரஷ்யாவுக்குச்(russia) சென்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் பற்றிய எழுந்தமானமான தகவல்களுக்கு எதிராக ரஷ்ய அரசாங்கம் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
விமானப் போக்குவரத்து மற்றும் உக்ரைன் (ukraine)அதிகாரிகள் ரஷ்யா மீது கொடிய விபத்திற்கான பழியை சுமத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வான் பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கப்பட்டிருக்கலாம்
விமானத்தின் சிதைந்த உடற்பகுதியின் காட்சிகள் துருப்பிடித்த சேதத்தைக் குறிப்பதாகத் தோன்றியது மற்றும் சில விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்ய குடியரசின் செச்சினியா வான் பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.
மேற்கு கஜகஸ்தானுக்குத் திருப்பி விடப்பட்டது
கசாக் நகரமான அக்டாவ் அருகே தரையிறங்குவதற்கு முன்பு, விமானம் காஸ்பியன் கடலின் குறுக்கே செச்சினியாவில் இருந்து மேற்கு கஜகஸ்தானுக்குத் திருப்பி விடப்பட்டது.
விமானத்தில் இருந்த 67 பேரில் 29 பேர் உயிர் தப்பினர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஜர்பைஜான் இன்று வியாழக்கிழமை தேசிய துக்க தினத்தை அனுசரித்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |