வெடித்து சிதறிய ரஷ்ய இராணுவ விமானம்! 29 பேர் பலி
Russo-Ukrainian War
World
Russia
By Dhilak
கிரிமியா தீபகற்பத்தின் மீது பறந்த ரஷ்ய ராணுவத்தின் ஏஎன்-26 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 29 பேர் பலியாகியுள்ளனர்.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்த விபத்துக்குக் காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் ஆறு விமானப் பணியாளர்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.
வெளிப்புறத் தாக்குதல்
மொஸ்கோ நேரப்படி நேற்று (31) மாலை சுமார் 6 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

விமானத்தின் சிதைவுகளில் வெளிப்புறத் தாக்குதல்கள் நடந்ததற்காக எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை என கூறப்படுகின்ற நிலையில், ரஷ்ய அதிகாரிகள் தரப்பிலிருந்து இது இது தொடர்பில் எவ்வித அறிக்கைகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி