புடின் உயிருடன் இல்லை - சர்ச்சையை ஏற்படுத்திய ஜெலன்ஸ்கியின் உரை
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் புடின் ஏற்கனவே இறந்திருக்கலாம் என்ற ரீதியில் பேசியதால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இவ்வாறு கருத்தை முன்வைத்தார்.
மேலும் கருது தெரிவித்த அவர், "நீண்ட நாட்களாகவே புடினுக்கு உடல் நலம் சரியில்லை என்றும், அதனால்தான் அவரது முகம் வீங்கியுள்ளது, கால்கள் நடுங்குகின்றன என்னும் ரீதியில் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
உளவுத்துறை தகவல்
உண்மையாகவே புடினுக்கு கணையப் புற்றுநோயும் பார்க்கின்சன்ஸ் நோயும் உள்ளன என்பதை நிரூபிக்கும் வகையிலான சில ஆவணங்களும் வெளிந்துள்ளன.
உக்ரைன் தரப்பில் பலமுறை புடினுக்கு பதிலாக, போலி தோற்றமுடையவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக கூறப்பட்டுள்ளது. அந்நாட்டு உளவுத்துறைத் தலைவர் புடின் புற்றுநோயால் விரைவில் இறந்துவிடுவார் என்று இந்த மாதத் ஆரம்பத்தில் கூறப்பட்டது.
ரஷ்யா தரப்பில் யாருடன் பேச்சு வார்த்தை நடத்துவது என்று தெரியவில்லை. தொலைக்காட்சியில் தொழிநுட்ப வடிவமைப்புகள் மூலம் புடின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுபோல் காட்டுகிறார்கள்.
இதற்கு பதில்
அவர் உயிருடன் இருக்கிறாரா, முடிவுகளை அவர் எடுக்கிறாரா அல்லது ரஷ்யாவில் முடிவுகளை எடுப்பது யார் என்று எனக்குப் புரியவில்லை."என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர், ''ஜெலன்ஸ்கி, எங்கள் தலைவர் புடினும் ரஷ்யாவும் இருக்கக்கூடாது என்று விரும்புகிறார், ஆனால், புடின் உயிருடன் இருக்கிறார், இன்னமும் உயிருடன் இருப்பார்."என்று கூறியுள்ளார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 21 மணி நேரம் முன்
