விண்வெளியில் வெடித்து சிதறிய செயற்கைகோள்
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) உட்பட ஒன்பது விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் நிலையில் ரஷ்ய செயற்கைக்கோள் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவிற்கு சொந்தமான Resurs-P1 Russian Earth observation satellite என்னும் செயற்கைக்கோள் செயல்படவில்லை என 2022 ஆம் ஆண்டே ரஷ்யா (Russia) அறிவித்திருந்தது.
இந்தநிலையில், புதனன்று மாலை திடீரென அந்த செயற்கைக்கோள் ஏறக்குறைய 200 துண்டுகளாக வெடித்துச் சிதறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விண்வெளி வீரர்கள்
சுனிதா வில்லியம்ஸ் உட்பட ஒன்பது விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் நேரத்தில் அந்த செயற்கைக்கோள் வெடித்துச் சிதற அவர்கள் அனைவரும் ஒரு மணி நேரத்துக்கு தங்களது விண்கலங்களுக்குள் பாதுகாப்பாக பதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க விண்வெளி கட்டுப்பாட்டு அமைப்பானது ரஷ்ய செயற்கைக்கோள் வெடித்துச் சிதறியதால் மற்ற செயற்கைக்கோள்களுக்கு இப்போதைக்கு எந்த அபாயமும் இல்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |