உக்ரைன் ஆளில்லா விமானத்திலிருந்து தப்ப தலைதெறிக்க ஓடிய ரஷ்ய வீரர் - வைரலான காணொலி
உக்ரைனில் போரில் ஈடுபட்டுவரும் ரஷ்ய வீரர் ஒருவர் ஆளில்லா விமானத்திடமிருந்து தப்ப தலைதெறிக்க ஓடும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
தலைநகர் கீவை சுற்றியுள்ள இடங்களிலிருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கிய நிலையில் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ள உக்ரைன் படைகள் உக்ரைனில் சுற்றித்திரியும் ரஷ்ய படையினரை கண்டறிந்து சுட்டுத்தள்ளி வருகின்றனர்.
அந்தவகையில், உக்ரைனுக்குள் அலைந்து கொண்டிருக்கும் ரஷ்ய இராணுவத்தினரை உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்கி கொன்று வருகிறது.
இந்த தாக்குதலில் அங்கிருந்த ரஷ்ய ராணுவ வீரர்கள் சிலர் ஓடி ஒளிந்துகொண்ட நிலையில், ஒருவர் மட்டும் உக்ரைன் இராணுவத்தின் ஆளில்லா விமானத்திடம் மாட்டிக்கொண்டு தப்பிப்பதற்காக தலைதெறித்து ஓடும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
A Russian soldier apparently ran away from this Ukrainian UAV and back to his unit, which was then struck by Ukrainian artillery. https://t.co/tgeYiIneFk pic.twitter.com/DVttW9XT75
— Rob Lee (@RALee85) April 7, 2022
