இயந்திர துப்பாக்கியின் கட்டுப்பாட்டை இழந்த ரஷ்ய வீரர்! உயிர் தப்பிய சக அதிகரிகள்
ரஷ்ய இராணுவத்தின் பயிற்சி நடவடிக்கையொன்றின் போது, சக்திவாய்ந்த சுழல் இயந்திரத் துப்பாக்கியின் கட்டுப்பாட்டை சிப்பாய் ஒருவர் இழந்ததாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அந்தக் காணொளியில், துப்பாக்கி கட்டுப்பாடின்றி சுழலத் தொடங்கியதுடன், தோட்டாக்கள் கணிக்க முடியாத வகையில் பல திசைகளிலும் பாய்வது காணொளியில் பதிவாகியுள்ளது.
இதனால் அருகில் இருந்த வீரர்கள் உடனடியாக பதுங்கி தப்பும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்
இந்த விடயம் குறித்து பிரித்தானிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, அந்தப் பயிற்சியில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் யாக் பி-12.7 (YakB-12.7) என்ற நான்கு குழல் சுழல் இயந்திரத் துப்பாக்கி எனக் கூறப்படுகிறது.
𝐕𝐢𝐫𝐚𝐥 𝐅𝐨𝐨𝐭𝐚𝐠𝐞: A Russian military training exercise reportedly went awry after troops mounted a YakB-12.7 helicopter machine gun on a fixed stand, with the weapon appearing to spin out of control during the drill.#Russia#RussianArmy#MilitaryTraining#YakB127 pic.twitter.com/rwwpVsx9K0
— Daily Kishtwar Times (@kishtwartimes1) July 12, 2026
இந்த ஆயுதம் முதலில் மில் மி-24 (Mi-24 Hind) தாக்குதல் ஹெலிகாப்டரில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொருத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கியின் பின்னால் நின்றிருந்த சிப்பாய் சுடத் தொடங்கிய சில நொடிகளிலேயே, ஆயுதத்தின் பின்னுதைப்பு காரணமாக பொருத்தும் அமைப்பு செயலிழந்ததுள்ளது.
இதனைத் தொடர்ந்து துப்பாக்கி தனது தாங்கியைச் சுற்றி வேகமாகச் சுழல, அதை கட்டுப்படுத்த முயன்ற சிப்பாயும் அதனுடன் இழுக்கப்படுகிறார்.
தூக்கி வீசப்பட்ட சிப்பாய்
சில நொடிகளில், அந்த சிப்பாய் அருகிலிருந்த தடுப்பின் மீது பலமாக வீசப்படுவதும், துப்பாக்கி தொடர்ந்து சுழன்றபடியே தோட்டாக்களைப் பாய்ச்சுவது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இதனால் அருகிலிருந்த மற்ற வீரர்கள் குனிந்து தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் மற்றொரு படைவீரர் விரைந்து சென்று சுழன்றுகொண்டிருந்த ஆயுதத்தின் இயக்கத்தை நிறுத்துகிறார்.
அதன்பின் துப்பாக்கிக் குழலைத் தொட முயன்ற அவர், அது அதிக வெப்பமடைந்திருந்ததை உணர்ந்து உடனடியாக கையைப் பின்வாங்கும் காட்சியும் காணொளியில் பதிவாகியுள்ளது.” என தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |