இலங்கைக்கு ரஷ்யா அளித்த அன்பளிப்பு
உலக உணவுத் திட்டத்திற்கான (WFP) பங்களிப்பின் ஒரு பகுதியாக, ரஷ்யா இலங்கை மக்களுக்கு சூரியகாந்தி எண்ணெயை நன்கொடையாக வழங்கியுள்ளது.
விற்றமின்கள் மற்றும் தாதுக்களால் செறிவூட்டப்பட்ட சுமார் 352 தொன் சூரியகாந்தி எண்ணெய் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
உண்மையான வரலாற்று தருணம்
இந்த நன்கொடையை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ரஷ்ய தூதுவர் லெவன் ட்ஜகார்யன், ரஷ்யா - இலங்கை உறவுகளின் வளர்ச்சியில் இது ஒரு உண்மையான வரலாற்று தருணத்தை குறிக்கிறது.

ரஷ்ய வெளியுறவுக் கொள்கையின் நோக்கங்களில் ஒன்று பொருளாதார, சமுக, கலாசார மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகும் என்று சுட்டிக்காட்டினார்.
"இந்த அம்சங்களைப் பொறுத்தவரை, ரஷ்ய கூட்டமைப்பு ஒருபோதும் சார்ந்து நிற்காது. நமது நாடு அனைத்து சவால்களை எதிர்கொண்டாலும், நட்பு நாடுகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். தொடர்ந்து முன்னேறுங்கள்! பெரிய விஷயங்கள் முன்னால் உள்ளன, ”என்று அவர் மேலும் கூறினார்