சிறிலங்காவில் ரஷ்ய அணு உலை - இறுதித் தீர்மானம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Sri Lanka
Kanchana Wijesekera
Russia
By Beulah
சிறிலங்காவில் ரஷ்யாவின் அணு உலையொன்றை உருவாக்குவது தொடர்பில் இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இரண்டு அணு உலைகளை இயக்கி 5000 மெகாவோட் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் முன்மொழிவொன்றை வெளியிட்டிருந்தது.
இருப்பினும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னரே இறுதித் தீர்மானம் எட்டப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இறுதி முடிவை எடுக்கவில்லை
இதுதொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், “பல விடயங்கள் குறித்து ஆராய்ந்த பின்னரே தீர்மானிக்க முடியும்.
அத்துடன், அரசாங்கம் இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
