சஜித்துக்கு ஆதரவு வழங்கும் சமத்துவக் கட்சி: வெளியானது அறிவிப்பு!

Kilinochchi Murugesu Chandrakumar Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Sep 02, 2024 09:17 AM GMT
Report

ஐனாதிபதி தேர்தலில் சமத்துவக் கட்சியானது ஐக்கிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் இன்று (02) சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி (Kilinochchi)) தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்

இது தொடர்பில் சமத்துவக் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில், தமிழ் மக்களினதும் இலங்கைத் தீவினதும் எதிர்கால நன்மைகளைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதென சமத்துவக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் ஆதரவு நிலைப்பாட்டால் உடைந்தது தமிழரசுக் கட்சி

ஜனாதிபதி தேர்தல் ஆதரவு நிலைப்பாட்டால் உடைந்தது தமிழரசுக் கட்சி

எமது ஆதரவாளர்கள்

இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு முன் எமது மக்கள், எமது ஆதரவாளர்கள், எமது சூழலில் இயங்கும் பல்வேறு செயற்பாட்டு அமைப்புகள், ஆக்கபூர்வமான செயற்பாட்டாளர்கள் ஆகிய தரப்புகளோடு கலந்தாய்வுகளைச் செய்திருந்தது, அத்துடன், வரலாற்று அவதானிப்பு, சமகால நிலவரம், எதிர்காலப் பயணம் ஆகியவற்றைக்குறித்தும் ஆராய்ந்தது.

சஜித்துக்கு ஆதரவு வழங்கும் சமத்துவக் கட்சி: வெளியானது அறிவிப்பு! | Sajith Gets Key Support From Tamil Party

தமிழ்பேசும் மக்களுடைய எதிர்காலமும் இலங்கைத்தீவின் எதிர்காலமும் சமாந்தரமானவை என்பதுடன் ஒன்றிலிருந்து ஒன்று பிரித்துப்பார்க்க முடியாதவையாகவும் உள்ளன.

அரச ஓய்வூதியர்களுக்கான மொட்டு வெளியிட்டுள்ள நற்செய்தி

அரச ஓய்வூதியர்களுக்கான மொட்டு வெளியிட்டுள்ள நற்செய்தி

இரட்டை நெருக்கடி

இந்த அடிப்படையிலிருந்து நாம் விலகும்போதெல்லாம் தமிழ்பேசும் மக்களுக்கு இரட்டை நெருக்கடி ஏற்படுகிறது. இதுவே வரலாற்று அனுபவமாகும். ஆகவே எமது அரசியல் தீர்மானத்தையும் செயற்பாடுகளையும் அதற்கேற்ற விதத்தில் மேற்கொள்ள வேண்டியது மக்களுடைய பங்கேற்பை முழுமையாகக் கொண்ட அரசியற் கட்சி என்ற வகையில் சமத்துவக் கட்சியின் கடப்பாடாகிறது.

சஜித்துக்கு ஆதரவு வழங்கும் சமத்துவக் கட்சி: வெளியானது அறிவிப்பு! | Sajith Gets Key Support From Tamil Party

அத்துடன், தமிழ்,முஸ்லிம், மலையகத் தரப்பினருடன் அரசியற் கூட்டைக் கொண்டுள்ள ஒரே வேட்பாளரான சஜித் பிரேமதாசாவை ஆதரித்து நிற்பது தமிழ் பேசும் சமூகத்தினருக்கு ஒப்பீட்டளவிலான அரசியற் பலத்தையும் சுதந்திரத்தன்மையையும் அளிக்கும் என நம்புகிறோம்.

எமது இந்த நிலைப்பாட்டினை உணர்ந்து எமது மக்கள் தமது ஆதரவை சஜித் பிரேமதாசவுக்கு அளிக்க வேண்டும் எனச் சமத்துவக் கட்சி கோருகிறது.“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

சஜித்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிமறைக்க முயல்கின்றாரா சி.வி.கே.சிவஞானம் !

சஜித்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிமறைக்க முயல்கின்றாரா சி.வி.கே.சிவஞானம் !

சஜித் பிரேமதாச

இதன்போது கருத்து தெரிவித்த, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, "யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம், அபிவிருத்தி, மற்றும் பிரதேச பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சஜித்துக்கு ஆதரவு வழங்கும் சமத்துவக் கட்சி: வெளியானது அறிவிப்பு! | Sajith Gets Key Support From Tamil Party

வட பிரதேசத்திற்காக தனியான ஜனாதிபதி செயலணி ஒன்றும் நிறுவப்படும். ஏனைய பிரதேசங்களுக்கும் மாகாண அடிப்படையில் செயலணிகள் அமைக்கப்படும்.

இந்த வேலை திட்டத்தின் ஊடாக யாழ் தேர்தல் மாவட்டத்தில், யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் கிளிநொச்சி (Kilinochchi) நிர்வாக மாவட்டங்களுக்கு இரண்டு உப செயலணிகளும் அமைக்கப்பட்டு, மாதாந்த வடக்கின் அபிவிருத்தி தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023