சஜித்தை நெருங்கிய கைது! வலுவான சாட்சியத்துடன் இறுதிக்கட்டத்தில் விசாரணை
எதிர்க்கட்சியின் முன்னணி அரசியல்வாதி ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க குற்றப்புலானாய்வு திணைக்களம் தயாராகியுள்ளதாக தென்னிலங்கை வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சராக இருந்த காலத்தில் பொது ஊழியர்களை தனிப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வலுவான ஆதாரங்கள்
இது தொடர்பாக வலுவான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ஊழியர்களிடமிருந்து ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த விசாரணையின் அடுத்த கட்டமாக குறித்த எதிர்க்கட்சி அரசியல்வாதியிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அவர் அமைச்சின் நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சஜித்துக்கு எதிரான முறைப்பாடு
இவ்வாறானதொரு பின்னிணயில், இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் குழுவொன்றை தனது மனைவியான ஜலனி பிரேமதாசவுக்குச் சொந்தமான ஒரு தனியார் நிறுவனத்தில் பணியமர்த்திய குற்றச்சாட்டில் சஜித் பிரமதாசவுக்கு எதிராக அண்மையில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்தது.
குறித்த முறைப்பாட்டில் 2015 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த காலத்தில் சஜித் பிரமதாச இந்த மோசடியை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதன்படி, மேற்கண்ட செய்தியும் சஜித்திற்கு எதிரான முறைப்பாடும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான போக்கில் காணப்படுகின்ற நிலையில், அடுத்ததாக கைது செய்யப்படப்போவது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமதாசவே என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
