சிறிலங்காவில் இடம்பெற்ற பாரிய உர மோசடி - நாடாளுமன்றத்தில் சஜித் கேள்வி
Parliament of Sri Lanka
Sajith Premadasa
By Mohankumar
நாட்டில் சேதன, நானோ திரவ உர மோசடியால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (9) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
மேலும் அதனோடு தொடர்புடைய நபர்களுக்கு எதிராக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் கேட்டார்.
ஏமாற்றம்
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “சீன சேதன உரங்களுக்காக 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது உரமோ அதற்காக செலுத்தப்பட்ட பணமோ இல்லை. இந்தியாவின் நானோ திரவ உரம் 7841 மில்லியன் ரூபா மேலதிகமாக செலுத்தப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.
மேலும் இது தொடர்பான அறிக்கைகள், மற்றும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்