தேர்தலின் பின்னரான சுகபோக வாழ்க்கை..! நாட்டின் வரலாற்றையே மாற்றும் சஜித்தின் திட்டம்
தேர்தலின் பின்னர் சுகபோக வாழ்க்கையை விட்டுவிட்டு அரச சேவையாளராக பணியாற்றுவேன் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அது இந்த நாட்டின் வரலாற்றையே மாற்றும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலில் வெற்றி
தேர்தலுக்காக கூட்டணி வைக்கும் போது பாதகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடமாட்டேன் என்றும், வெற்றி பெற்ற பிறகு சுகபோக வாழ்க்கையைத் துறந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே தனது உடன்பாடு என்றும் அவர் கூறியுள்ளார்.
சமகி ஜன பலவேக டீல் அரசியல் செய்யாது என்றும், திருட்டு, ஊழல், மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படுவதோடு, திருடப்பட்ட பணம் திரும்பப் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணி
மேலும், அவர் கூறுகையில், தனது கட்சி அமைக்கும் புதிய கூட்டணி குறித்து பல்வேறு நபர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தாலும், இது கொள்கை ரீதியான கூட்டணி என்றும், , பதவி நாடகமோ கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |