கோட்டாபயவின் அதிகாரங்களை மேலும் பலப்படுத்துகிறது 21 ஆவது திருத்தம்!
                                    
                    SJB
                
                                                
                    Dr Wijeyadasa Rajapakshe
                
                                                
                    Gotabaya Rajapaksa
                
                                                
                    Sajith Premadasa
                
                                                
                    21st Amendment
                
                        
        
            
                
                By Kanna
            
            
                
                
            
        
    அரசாங்கத்தின் உத்தேச அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் அரச தலைவரின் அதிகாரங்களை பலப்படுத்தும் வகையில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
21வது திருத்தச் சட்டத்தை உருவாக்கிய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை ஒழிக்கும் வகையில் உத்தேச வரைபு இல்லை என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
21வது திருத்தம் தொடர்பில் சஜித் அனுப்பிய கடிதம்

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் முன்வைக்கப்படாத அமைச்சுப் பதவிகளை அரச தலைவருக்கு வழங்கும் வகையில் அரசாங்கத்தின் புதிய வரைவு காணப்படுவதாக அவர் கூறினார்.
21 ஆவது திருத்தச் சட்டத்தின் புதிய வரைவு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        