கைது செய்யப்படுவாரா சஜித்.! லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைப்பு
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவருமான சஜித் பிரேமதாச, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அழைப்பாணை, ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடைபெற்று வரும் விசாரணையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
குற்றச்சாட்டுகள்
ஆதாரங்களின்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிகொத்தா தலைமையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரச நிதி பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை, அரச ஊழியர்கள் குழுவொன்றை தனது மனைவிக்கு சொந்தமான ஒரு தனியார் நிறுவனத்தில் பணியமர்த்திய குற்றச்சாட்டில் சஜித் பிரமதாசவுக்கு எதிராக அண்மையில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த காலத்தில் சஜித் பிரமதாச இந்த மோசடியை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
