அடுத்த அரச தலைவர் சஜித்தே - எடுக்கப்பட்டது தீர்மானம்(படங்கள்)
SJB
Sajith Premadasa
President of Sri lanka
By Sumithiran
அடுத்த அரச தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிக்கும் தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரித்துள்ளனர்.
இது தொடர்பான தீர்மானம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் கொண்டுவரப்பட்டதுடன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதுயுதீன், பி. திகாம்பரம், மனோ கணேசன் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



