மக்கள் பிரச்சினைக்கு எதிர்க்கட்சி தலைவரிடமிருந்து தீர்வு
ஒரு விடியலின் ஆரம்பம் (உதவக உத்தம மஹியங்கனய) வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கிராதுருகோட்டே வைத்தியசாலைக்கு நேற்று(29) விஜயம் செய்துள்ளார்.
கிராதுருகோட்டே வைத்தியசாலை அதிகமான சிறுநீரக நோயாளர்களை கொண்டுள்ள நிலையில் அங்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் இல்லாமையால் நோயாளர்கள் பெரிதும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களை பெற்றுத்தரமாறு கோரிய பொதுமக்களின் வேண்டுகோளிற்கிணங்க நேற்று எதிர்க்கட்சித் தலைவர் கிராதுருகோட்டே வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் உறுதி மொழி

அங்குள்ள வைத்தியர்களோடு கலந்துரையாடலை மேற்க்கொண்டபோது, வைத்தியசாலை அகாரிகளால் அதனை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அதற்கான எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையிலேயே காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவ்விடத்திலேயே, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர், இப்பிரச்சினை குறித்து தெரிவித்ததோடு, இப்பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தும்படியாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்குவதாக வைத்தியசாலை அதிகாரிகளுக்கு உறுதியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.