புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு அடித்த அதிஷ்டம் -சொத்துக்களை விற்கும் அரசாங்கம்
புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு விற்கப்படும் வீடுகள்
நகர அபிவிருத்தி அதிகாரசபையால் (UDA) நிர்மாணிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை புலம் பெயர்ந்த இலங்கையர்களுக்கு டொலருக்கு விற்பனை செய்யும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் மூன்று வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளும் 43,700 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பன்னிபிட்டிய, கொட்டாவ மற்றும் மாலபே பிரதேசங்களில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட வியத்புர வீடமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்தக் குடியிருப்புகள் ஆகும்.
மேலும் 10 வீடுகளை வாங்க விண்ணப்பம்
மேலும் 10 வீடுகளை வாங்குவதற்கு ஏற்கனவே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரித்தானியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்களால் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.