அமெரிக்காவில் கோக கோலா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு
கோக கோலா மற்றும் நெஸ்லே நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர அரசு இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.
அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மக்களுக்கு உடல் நலக் கோளாறுகளை உருவாக்குவதாக தெரிவித்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உணவுப் பொருள்
இந்தநிலையில், மக்களின் உடல் நலத்திற்கு கேடு விழைவிக்கும் உணவுப் பொருள்களைத் தயாரிப்பதாக ஓரியோ மற்றும் கிட் கேட் போன்ற பிரபல தின்பண்டங்களின் தயாரிப்பாளர்கள் உள்பட பத்து நிறுவனங்களுக்கு எதிராக சான் பிரான்சிஸ்கோ அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து சான் பிரான்சிஸ்கோ அரசின் வழக்குரைஞர் டேவிட் சியூ கருத்து தெரிவிக்கையில், இந்த நிறுவனங்கள் சுகாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளதாகவும் மற்றும் அவர்கள் உருவாக்கிய தீங்கிற்கு இப்போது பொறுப்பேற்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மிகவும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், மிட்டாய்கள், சோடா மற்றும் சாக்லேட் உள்ளிட்ட தின்பண்டங்கள் அதிகம் சாப்பிட தூண்டும் வகையிலான ரசாயனங்கள் சேர்த்து தயாரிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவு
இதில், அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கான சிகிச்சை செலவுகளுக்கு உள்ளூர் அரசுகளுக்கு உதவ அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் இந்த வழக்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் பெப்ஸிகோ, கிராஃப்ட் ஹெயின்ஸ், கெலாக்ஸ் மற்றும் மார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து எந்தவொரு நிறுவனமும் இதுவரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |