பிள்ளையான் வழக்கில் நீதிபதிகள் மாற்றம்! நாடாளுமன்றில் சாணக்கியன்
அண்மையில் வெளிவந்துள்ள சில குரல் பதிவுகளைப் பார்க்கும் போது இலங்கையில் நீதித்துறை தொடர்பாக பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பிள்ளையான் என்று அழைக்கப்படும் ஒரு கொலையாளியை வெளியில் கொண்டு வருவதற்காக நீதிபதிகளை மாற்றியுள்ளதாக இந்த குரல் பதிவில் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் பிள்ளையானின் வழக்கில் நீதிபதியாக இருந்த நீதிபதியை மாற்றி புதிய நீதிபதியை நியமித்ததன் மூலமே அவர் வெளியாகியமை குறிப்பிடத்தக்க விடயம்.
உண்மையிலேயே நீதித்துறைக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் அமைச்சர் என்ற ரீதியில் இதற்கு நீங்கள் பதில்கூற வேண்டும்.இதில் உங்களது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காணொளியில் தெரிவிக்கின்ற விடயங்களை நாடாளுமன்றத்தில் ஒளிபரப்பு செய்வதற்கான முயற்சியை நான் எடுக்க விரும்புகின்றேன்.