சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பெப்ரவரி 02 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த தீர்ப்பானது, இன்று (31) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் இன்று சோபித ராஜகருண மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
மனுக்கள் தாக்கல்
பிரதிவாதியான சனத் நிஷாந்த தற்போது உயிரிழந்துவிட்டதால், அவமதிப்பு மனுக்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்காக அவர்களை எதிர்வரும் 02 ஆம் திகதி அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் பிரியலால் சிறிசேன மற்றும் விஜித குமார ஆகிய இரு சட்டத்தரணிகளினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |