சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவுநாள் அனுஸ்டிப்பு
Jaffna
Vavuniya
By Mohankumar
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவு தினம் இன்று வவுனியா கற்குளத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வினை சிவசேனை மற்றும் கற்குளம் மகாவிஷ்ணு ஆலயம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந் நிகழ்வு மகாவிஷ்ணு ஆலய நீர் தடாகத்தில் இடம்பெற்றது.
தமிழில் மந்திரம்
இதன்போது தமிழில் மந்திரமோதி மோட்ச அர்ச்சனை செய்யப்பட்ட இவ் அஞ்சலி நிகழ்வில் சிவசேனை அமைப்பின் வவுனியா அமைப்பாளர் தமிழ் திரு அ. மாதவன் உட்பட கிராமத்தவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்