இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுடன் கடற்றொழில் அமைச்சர் விசேட சந்திப்பு
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த சந்திப்பானது எதிர்வரும் புதன்கிழமை(04.12.2024) கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரியவருகின்றது.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள்
குறிப்பாக, இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவதன் காரணமாக தொடர்ச்சியான கைதுகள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசும் அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்களைக் கைது செய்யுமாறும், தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துகின்றபோது அவற்றைக் கைப்பற்றுமாறும் கடற்படைக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரைச் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, கடற்றொழில் மற்றும் கடல்சார் ஆய்வுகள் குறித்தும், இந்தியாவுடன் கூட்டுச் செயற்பாடுகளில் பங்கேற்பது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின் போது ஆராயப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், கடற்றொழில் அமைச்சராக சந்திரசேகர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அவரைச் சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்