இரவு விடுதிகளில் விபச்சாரிகளுடன் சில அமைச்சர்கள்!! நாடாளுமன்றத்தில் பொன்சேகா பகிரங்க தகவல்
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சில உறுப்பினர்கள் ஹெரோயின் போதைப் பொருளை உட்கொண்டு இரவு விடுதிகளில் விபச்சாரிகளுடன் நேரத்தை செலவிடுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்
தற்போதைய அமைச்சரவையால் தேசத்தைக் காப்பாற்ற முடியாது
“தற்போதைய நாடாளுமன்றத்தில் உள்ள 50 வீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோசடி செய்பவர்கள். அதனால் இலங்கையின் அரசியல் கலாசாரத்தை மாற்ற முடியாது.
தொலைநோக்குப் பார்வை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15 வீதமானோர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிலர் ஹெரோயின் போதைப் பொருளை உட்கொண்டு இரவு விடுதிகளில் விபச்சாரிகளுடன் நேரத்தை செலவிடுகின்றனர். எனவே தற்போதைய அமைச்சரவையால் தேசத்தைக் காப்பாற்ற முடியாது.
ரணில் பிரதமராவதற்கு நானே காரணம்
பிரதமர் பதவியை ரணில் ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் அரச தலைவர் என்னை பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
பெரும்பாலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எனக்கு ஆதரவளித்தால் மட்டுமே நான் பிரதமர் பதவியை ஏற்பேன் என்று அரச தலைவரிடம் கூறினேன்.
எனவே, அவர் பிரதமராக வருவதற்கு வழிவகுத்த பெருமையை ரணில் விக்ரமசிங்க எனக்கு வழங்க வேண்டும்", எனக் குறிப்பிட்டார்.
காலி முகத்திடல் போராட்டம்
காலிமுகத்திடல் போராட்டத்தின் தீரம் குறைந்துள்ளதாக கூறப்படுகின்ற போதும், நாட்டின் ஒவ்வொரு பொதுமகனின், பொதுமகளின் மனங்களில் போராட்டங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் காலிமுகத்திடல் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யமுடியாது, போராட்டக்கார்களுக்கு நாட்டு மக்கள் உணவுப்பொருட்களை வழங்கி போராட்டத்துக்கு வலுச்சேர்க்கவேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
