வெளிப்படையான விசாரணை வேண்டி அரசாங்கத்திடம் கோரிக்கை : தேசிய மக்கள் சக்தி
முல்லைத்தீவு நீதவான் சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் உண்மையைக் கண்டறிய வெளிப்படையான விசாரணைகளை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
ஓய்வுபெற்ற முப்படைகள் மன்றத்தின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஒரு நாடாக நாம் எங்கே உள்ளோம்
“தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் நீதவான் கூறியது உண்மையென்றால் அது பாரதூரமான நிலைமையாகும்.
நீதிபதியின் கூற்றுகள் உண்மையாக இருந்தால், ஒரு நாடாக நாம் எங்கே இருக்கிறோம்? என்பதனை சிந்திக்க வேண்டும்.
ஒரு நீதிபதி அரசாங்கத்திற்கு பாரபட்சமில்லாத தீர்ப்பை வழங்கியதற்காக மரண அச்சுறுத்தல்களைச் சந்திக்க நேர்ந்தால், அது ஒரு தீவிரமான சூழ்நிலை ஆகும்.
அதேசமயம், நீதிபதியின் கருத்தில் உண்மை இல்லையென்றால், அதன் பின்னணியில் உள்ள சதியை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.” என்றார்.

பெளத்தம் சிங்களவர்களுக்கு சொந்தமானதல்ல: அதை தமிழர்களே வளர்த்து எடுத்தார்கள் என்கிறார் பியனந்த தேரர்!


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 13 மணி நேரம் முன்
