துருக்கி நிலநடுக்க அழிவுகளின் செய்மதிப்படங்கள்
துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு அங்கு ஏற்பட்ட அழிவு பாதிப்பின் அளவை காட்டும் செய்மதி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15000-ஐ தாண்டியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பல உயரமான கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்து மிக மோசமான அழிவை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அழிவுகளின் செய்மதி புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அவசரகால முகாம்கள்
அதேவேளை, நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக திறந்தவெளி பகுதிகள் மற்றும் மைதானங்களில் நூற்றுக்கணக்கான அவசரகால முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தின.
நிலநடுக்கம் காரணமாக 23 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் 77 தேசிய மற்றும் 13 சர்வதேச அவசர மருத்துவ குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

