பூமிக்கு ஏற்படப்போகும் பெரும் ஆபத்து மோதப்போகும் செயற்கைக்கோள் : ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
செயலிழந்த சோவியத் செயற்கைக்கோள் கட்டுப்பாடற்ற முறையில் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் அபாயம் இருப்பதாக நெதர்லாந்தில் உள்ள ஒரு செயற்கைக்கோள் கண்காணிப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1972 ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியனால் ஏவப்பட்ட காஸ்மோஸ் 482 விண்கலத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, வெள்ளிக்கு பறக்கவிருந்த செயற்கைக்கோள், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக பூமியைச் சுற்றி வந்து கொண்டிருந்ததாக டச்சு ஆராய்ச்சியாளர்கள் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.
செயற்கைக்கோள் பூமியில் மோதும் இடம்
செயற்கைக்கோள் பூமியில் மோதும் இடம் அல்லது பகுதி இன்னும் கவனிக்கப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த செயற்கைக்கோள் தற்போது பூமியின் வளிமண்டலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது, மேலும் மே 8 முதல் 11 வரை பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு தொன் எடையுள்ள பெரிய செயற்கைக்கோள், மே 10 ஆம் திகதி பூமியின் வளிமண்டலத்தில் நுழைய வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அரசாங்கமே பொறுப்பு
இது பூமியின் எந்தப் பகுதியையும் அல்லது இடத்தையும் தாக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஹார்வர்ட் பல்கலைக்கழக வானியலாளரும் இயற்பியலாளருமான ஜோனாதன் மெக்டோவல், செயற்கைக்கோள் பூமியில் விழுந்தால் ஏற்படக்கூடிய எந்தவொரு சேதத்திற்கும் ரஷ்ய அரசாங்கமே பொறுப்பு என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
