நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு
                                    
                    Lanka Sathosa
                
                                                
                    Sri Lanka Food Crisis
                
                        
        
            
                
                By Vanan
            
            
                
                
            
        
    நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த விலை குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு,

சிவப்பு பச்சை அரிசி 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை ரூ. 199 ஆகும்.
கீரி சம்பா அரிசி 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை ரூ. 225 ஆகும்.
பெரிய வெங்காயம் 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை ரூ. 225 ஆகும்.
நெத்தலி கருவாடு 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை ரூ. 1150 ஆகும்.
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்