முதன்முதலாக லெபனானில் கொல்லப்பட்ட சவுதி ஹிஸ்புல்லா தீவிரவாதி
ஹிஸ்புல்லாவுக்காக போராடும் சவுதி(saudi) நாட்டவர் நேற்று(09) லெபனானில்(lebanon)நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார் என லெபனான் பத்திரிகையான L'Orient Le Journ தெரிவித்துள்ளது. ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழுவிற்கு எதிரான இஸ்ரேலின் போரில் சவுதியின் குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டது இதுவே முதன்முறை என தெரிவிக்கப்படுகிறது.
ஓம்ரான் கரீம்(Omran Karim,) என்று பெயரிடப்பட்ட அந்த நபர், சவுதி அரேபியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக வாழும் கதீஃப் நகரைச் சேர்ந்தவர்.
பல் மருத்துவராகப் பணி
அவர் ஹிஸ்புல்லாவின் கோட்டையான பெய்ரூட்டின் தெற்கு தாஹியே புறநகர்ப் பகுதியில் பல் மருத்துவராகப் பணிபுரிந்தார்.
The first Saudi martyred in southern Lebanon..
— Gaza War BD (@GazaWar_BD) November 9, 2024
The martyred resistance dentist "Omran Karim" from the city of Qatif, ascends as a martyr while confronting the occupation pic.twitter.com/tAC0c5S7an
கரீம், சவூதி அரேபியாவில் உள்ள ஹிஸ்புல்லா கிளையின் தலைவரான அபு ஓம்ரான் என்ற அஹ்மத் இப்ராஹிம் அல்-மௌகாசிலின் மகன் என்றும், 1996 ஆம் ஆண்டு சவுதியில் 19 அமெரிக்க வீரர்களைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு பெய்ரூட்டில் சவூதி உளவுத்துறையால் அல்-மௌகசில் கைது செய்யப்பட்டு சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |