பாடசாலையில் பயங்கரம்..! 25 பேர் பலி - உகாண்டாவில் சம்பவம்
By Vanan
உகாண்டாவின் எல்லை நகரமான எபாண்ட்வேயில் உள்ள பாடசாலை ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் பலியாகினர்.
லுபிரிஹா தனியார் மேல்நிலைப் பாடசாலையில் நேற்றிரவு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
25 பேர் பலி
இத்தாக்குதலில் இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பவேரா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
8 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
