பிரபல பாடசாலை ஒன்றில் சேர்ப்பதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி - ஒருவர் கைது!
Sri Lanka Police
Kandy
Sri Lankan Schools
By pavan
கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 2020ஆம் ஆண்டு மாணவி ஒருவரை சேர்த்துக் கொள்வதாக கூறி மூன்று இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
இந்த கைது சம்பவம் இன்று (26) இடம்பெற்றதாக கட்டுகஸ்தோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் கட்டுகஸ்தோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு மெனிகின்ன பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரை கைது செய்தனர்.
தீவிர விசாரணை

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இவ்வாறு வேறு நபர்களை ஏமாற்றியுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை இன்று 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி