சாரதியின் கவனயீனத்தால் உயிரிழந்த 17 வயது மாணவி..!
பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த 17 வயது பாடசாலை மாணவி மீது ஜீப் மோதிய விபத்தில் குறித்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று (20) காலை குருநாகல், உஹுமிய, டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சித்துமினி ராஜகுரு என்ற மாணவியே சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சாரதியின் நித்திரை

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தனியார் வகுப்பில் கலந்துகொள்வதற்காக குருநாகலுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போதே குறித்த மாணவி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
அவ்வேளை வீதியில் பயணித்த ஜீப் வண்டியானது , சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல், வீதியை விட்டு விலகி, மாணவி மீது மோதி, தொலைபேசி கம்பத்தில் மோதி நின்றுள்ளது.
சாரதியின் நித்திரையே விபத்திற்கு காரணம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.