காதல் தோல்வி - பாடசாலை மாணவியின் தவறான முடிவு..!
Sri Lanka Police
Death Penalty
Death
By Kiruththikan
அனுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயாராகிக்கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
காதல் தொடர்பின் அடிப்படையில் அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த மாணவியுடன் சிறிது காலம் காதல் உறவில் ஈடுபட்டு வந்த வேறு பாடசாலை மாணவன் ஒருவர் தனது உறவை முறித்துக் கொண்டதையடுத்து மாணவி இந்த விபரீத முடிவை எடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தந்தையின் பராமரிப்பு
மாணவியின் தாயார் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த நிலையில் குறித்த மாணவி தந்தையின் பராமரிப்பில் கல்வி கற்று வந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்