நாளை பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு சற்று முன்னர் அறிவித்துள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றுடன் பாடசாலையை திறப்பது தொடர்பில் இடம் பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாளை (12.12.2022) பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாளை பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றுடன் பாடசாலையை திறப்பது தொடர்பில் இன்று (11.12.2022) கலந்துரையாடலில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலின் பின்னர் தீர்மானம் இந்த அறிவித்தலை கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நிலவும் காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
எனவே இன்றைய கலந்துரையாடலின் பின்னரே பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
YOU MAY LIKE THIS
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்
