அதிகரிக்கவிருக்கும் பாடசாலை உபகரணங்களின் விலை
Sri Lankan Peoples
Sri Lankan Schools
By Dilakshan
பெறுமதிசேர் வரி 18% ஆக உயர்த்தப்படவுள்ளதால், ஜனவரி முதல் பாடசாலை உபகரணங்களின் விலை தற்போதைய விலையை விட இரு மடங்காக உயரும் என புத்தகக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகையால் எதிர்வரும் ஆண்டிற்குத் தேவையான புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களை இவ்வருட இறுதிக்குள் கொள்வனவு செய்வது நல்லது என தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, பாடசாலை உபகரணங்களின் விலை கட்டுப்படியாக முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மாணவர்களின் பெற்றொர்கள் கூறியுள்ளனர்.
விலை அதிகரிப்பு
இந்நிலையில், கடந்த மாத விலையுடன் ஒப்பிடும் போது அனைத்து பாடசாலை உபகரணங்களின் விலைகள் ஏற்கனவே 05 – 15 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி