யாழில் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்து வந்த 19 வயது வியாபாரி!
யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பகுதியில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி போதை மாத்திரை விற்பனை செய்துவந்த 19 வயதுடைய வியாபாரி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் யாழ்ப்பாண காவல்நிலைய காவல்துறையினர் குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட போது போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த அந்த 19 வயது இளைஞணை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 5 ஆயிரம் போதை மாத்திரைகளை மீட்டனர்.
ஆரம்ப கட்ட விசாரணை
பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி இந்த போதைப்பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக கைது செய்யப்பட்டவரிடம் மேற்கோண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
