மதுபானம் அருந்திய நான்கு மாணவர்கள்; காவல்துறையினர் எடுத்த முடிவு!
Sri Lanka Police Investigation
Crime
Sri Lankan Schools
By Pakirathan
நான்கு பாடசாலை மாணவர்கள் மது அருந்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் கம்பளை நகரில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
மது அருந்திவிட்டு, பீடி புகைத்துக்கொண்டிருக்கும் போது இவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மது அருந்திய மாணவர்கள்
உயர்தரத்தில் கல்வி கற்கும் குறித்த நான்கு மாணவர்கள் கம்பளை நகரில் உள்ள மதுபானசாலை ஒன்றில் மதுபான போத்தல்களை கொள்வனவு செய்து, பின்னர் அதை பாடசாலைக்கு அருகில் உள்ள பற்றையின் பின்னால் மறைந்து இருந்து அருந்தியுள்ளனர்.
மதுபான போத்தல்கள் தீர்ந்த பின் பீடி புகைத்துக்கொண்டிருந்த சமயம் காவல்துறையினர் இவர்களை கைது செய்துள்ளனர்.
காவல்துறையினர் எடுத்த முடிவு
கம்பளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் காவல்துறையினரின் எச்சரிக்கையின் பின்னர், அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்