பாடசாலை மாணவர்களிடையே அடிதடி - பரிதாபமாக பலியான 13 வயது மாணவன்
Ampara
Death
Sri Lankan Schools
By pavan
அம்பாறை - திருக்கோவில் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது.
தம்பிலுவில் ஏ.பி.சி வீதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிவபாலன் கிசாஷாந் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும், உயிரிழந்த மாணவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மற்றைய மாணவர்
அதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய மாணவர் காயமடைந்ததுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பில் திருக்கோவில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்