ஆசிரியர் ஆட்சேர்ப்பு - பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவித்தல்
Ministry of Education
By Vanan
அரசாங்க மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரச துறையில் பணிபுரியும் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் இப்போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என கல்வி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை
முதலில் க.பொ.த உயர்தர வகுப்புகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையையும், அதன் பின்னர் அரச பாடசாலைகளில் உள்ள ஏனைய வெற்றிடங்களையும் பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி